நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள்  விழாவில் திடீர் பரபரப்பு

நாகர்கோவிலில் அங்கன்வாடி ஊழியர்கள்  விழாவில் திடீர் பரபரப்பு
நாகர்கோவிலில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆண்டு விழா நிகழ்ச்சி
நாகர்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க துவக்க விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று 22 ஆம் ஆண்டு துவக்கக் விழாவை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடக்க இருந்த நிகழ்ச்சியை நேசமணி போலீசார் முறையாக அனுமதி பெறவில்லை எனவும், அங்கிருந்து கலைந்து செல்லவும் கூறி திடீரென தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தற்போது அனுமதி வழங்க முடியாது என போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்கனவே நாங்கள் அனுமதி பெற்று தான் நிகழ்ச்சியை நடத்துகின்றோம் எனவும் நிகழ்ச்சியை தடுத்தால் நாங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story