அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்து வதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிறுத்த வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கண்டித்து 1000க்கு மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பெரும்பாலும் அங்கன்வாடி மையத்திற்கு கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் மையத்திற்கு வந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பால் ஊட்டவும் மற்றும் உணவும் கொடுக்கவும் அதிகமாக வருவதால் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்து வதால் தாய்மார்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அங்கன்வாடி மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 1000க்கு மேற்பட்டவர்களை சூலக்கரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையங்களில் கேமரா பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாளை விருதுநகருக்கு வருகை தரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனு அளிப்பதோடு போராட்டத்தில் ஈடுபட போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் 1000க்கு மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story