கோணம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கினை கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம்,கோணம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கோணம் பகுதியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் பூப்பந்து மைதானம் அமைந்துள்ளது. இம்மைதானத்தில் ரூ.3.39 இலட்சம் மதிப்பில் 16 எல்.இ.டி விளக்குகளும், 24 டியூப் லைட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள கால்பந்து மைதானமும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நல அலுவலர் தராஜேஷ், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story