சிவகாசியில் ஆனி பிரமோற்சவ விழா

சிவகாசி ஆனி பிரமோற்சவ விழாவில் அப்பன் கருடன்,தாயார் அன்னம், திருமங்கையாழ்வார் தோளுகினியான் வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் 5 ஆம் திருவிழாவில் அப்பன் கருட, தாயார் அன்ன வாகனத்திலும், திருமங்கையாழ்வார் தோளுகினியான் வாகனத்திலும் வீதி உலா. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் - ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவம் 5 ஆம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் - ஸ்ரீசெங்கமலத்தாயார் சுவாமிகள் கருட மற்றும் அன்ன வாகனங்களில் எழுந்தருளின மற்றும் திருமங்கையாழ்வார் தோளுகினியான் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர் ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story