ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனிபெருந்திருவிழா முன்னிட்டு 9ம் திருவிழாவான அதிகாலையில் மாயூரநாதர் சுவாமி மற்றும் அஞ்சல் நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்துசுவாமிஎழுந்தருளிஆனி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவ வாத்தியம் மேலதாள முழங்க 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா முன்னிட்டு பத்து நாள் திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாட்களும் ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் பூச்சப்பரம், சிம்ம வாகனம், கற்பக வாகனம், காமதேனு வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி அலங்காரம் செய்து மேல தாளத்துடன் வீதி உலா நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை ஏழாம் திருவிழாவான சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆனி பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்.இன்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து திருத்தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நகரை சுற்றியுள்ள சத்திரப்பட்டி, சேத்தூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இருந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கு மற்றும் சிவவாத்தியங்கள் முழங்கியவாறு, சிவ சிவா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்காவல் படையினர், தீ அணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.