கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

X
கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி ஊராட்சி மொட்டையகவுண்டண்பட்டியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் திங்கட்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமினை வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் கறவை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும் மற்றும் சிறப்பாக கால்நடை வளர்ப்போர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வேம்பார் பட்டி ஊராட்சி செயலர் மார்டின் கென்னடி நன்றி தெரிவித்தார்.
Next Story
