ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா : நகரில் போக்குவரத்து மாற்றம்

ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா : நகரில் போக்குவரத்து மாற்றம்

மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு 

ஆஞ்சநேயர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் கோட்டை சாலையில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை சாலையில் 18 அடி கொண்ட ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு தினசரி நாமக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகள் இந்து அறநிலையத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை புரிய உள்ளதால் அவர்களுக்கான பதுகாப்பு குறித்து நகர மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் கேட்டறிந்தார். விழா நடைபெறுவதை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காக நாமக்கல் நகர் முழுவதும் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நாமக்கல் கோட்டை சாலை மட்டும் வருகின்ற 31 மற்றும் 1- ம் தேதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்படுள்ளதாக மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் அனைத்து வகையான வாகனங்களும் பொய்யேரிகரை சாலை, பரமத்தி சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.


Tags

Next Story