அண்ணா நினைவுதினம்- அரியலூர் எம்.எல்.ஏ மரியாதை

அண்ணா நினைவுதினம்- அரியலூர் எம்.எல்.ஏ மரியாதை

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூரில் மதிமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் கடைபிடிக்கபட்டது. இதனையொட்டி மதிமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story