திருப்பூரில் சிவன் கோவில்களில் விமர்சையாக நடந்த அன்னாபிஷேகம்

X
அன்னாப்பிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் அண்ணாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் போயம் பாளையம் அருகே உள்ள சதாசிவ நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதாசிவநாதர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள 108 லிங்கங்களுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள நின்ற கோலத்தில் உள்ள சிவனுக்கு இரண்டு லட்சம் மதிப்பில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டது திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
