முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அன்னதானம் அலங்காநல்லூர், மார்ச்.6- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பிரிவில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், அம்மா பேரவை நிர்வாகி வெற்றிவேல் மாவட்ட மகளிரணி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story