ராமநாதபுரம் தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரம்

ராமநாதபுரம்  தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரம்

அண்ணாமலை பிரச்சாரம்

கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்,

மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ள கட்சி தலைவர்கள் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் நின்றுவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் ஐயா ஓபிஎஸ் ஞாயம் கேட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட இருந்த நிலையில் அவரது விருப்பத்துடன் முன்னாள் முதல் ஓபிஎஸ் ஐயாவை இங்கு போட்டியிட செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசியல்வாதிகளில் மிகவும் நெருக்கமானவர் ஐயா ஓபிஎஸ் எனவே அவருக்கு வாக்களித்தால் மக்களின் பிரச்சனையை நேரடியாக பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு பெற்று தருவார். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை திமுக பொய்யான கருத்துக்களை கூறி ஏமாற்றி வருகிறது. பாஜக ஆட்சி அமைந்தால் நிச்சயம் கச்சத்தீவு மீட்கப்படும் மீனவர்கள் உரிமை காக்கப்படும் என்றார் தொடர்ந்த பேசிய அவர் தேர்தல் முடிவுக்கு பின் ஓபிஎஸ்யின் விஸ்வரூபம் தெரியவரும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் பிரச்சனையான குடிநீர் பிரச்சினை தீர்வு கான வைகை குண்டாறு காவிரி இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தி தரப்படும். மேலும் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடல்அட்டை மீதான தடையை நீக்கி கடலெட்டை மீனவர்கள் பிடிப்பதற்கு உரிமை பெற்று தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து

பலாப்பழ சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வதற்காக அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தேனியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிச் சென்ற பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது ஹெலிகாப்டரை சோதனை செய்தனர் சோதனையின் போது அவர் அண்ணாமலை அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் இருந்த பை மற்றும் ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டிருந்த அவரது பை உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். அதில் பணமோ அல்லது பரிசு பொருட்களை ஏதும் இல்லாததால் அதிகாரிகள் திரும்பினர்.

Tags

Next Story