அண்ணாமலை ஒரு அண்டபுழுகர்: மேயர் சத்யா கடும் தாக்கு
விழாவில் பேசும் மேயர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில், ஓசூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் முகவர்கள் கூட்டம் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது உணவு பொருட்கல் வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும், திமுக நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக ஒசூர் மேயர் சத்யா பேசுகையில்திருச்சியில் விமான நிலையம் திறக்க வந்த பிரதமர் மோடி மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை பார்வையிட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் மக்களின் துயரங்களை பார்க்க கூட மனதில்லையா? இதுவரை மழையால் பாதித்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தான் நிதியை கொடுக்கிறார்கள்.திருக்குறள், பாரதியார் பாடல்களை பாடும் பிரதமர் மோடியால் என்ன பிரயோஜனம் தமிழ் பழமையான, மூத்தமொழி என்று, சொம்மொழியான தமிழ் வளர்ச்சிக்காக அவர் ஒதுக்கிய நிதி 6 கோடி ரூபாய் மட்டும் தான்.
தமிழகத்தில் 6.50லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது, அண்ணாமலை உபியில் 31 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது என்கிறார்.
தமிழகத்தில் வந்துள்ள முதலீடுகளை காட்ட முடியும், உபி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வந்த முதலீடுகளை காட்ட முடியுமா அண்ணாமலையை பொருத்தவரை அவர் ஒரு அண்டப்புழுகன், அவர் சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லை என விமர்சித்தார்.