பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் அண்ணாமலை பரப்புரை

பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் அண்ணாமலை பரப்புரை
X

வாக்கு சேகரித்த அண்ணாமலை

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜகவின் மாநில தலைவரும் கோவை தொகுதி நாடாளு மன்ற வேட்பாளருமான அண்ணாமலை பரப்புரை செய்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் இன்று தனது பரப்புரையை தொடங்கினார்.

பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாதப்பூர் பகுதியில் தனது பரப்புரையை தொடங்கிய அவர் தமிழகத்தின் மாற்றத்திற்காகவும் பல நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் நாம் களத்தில் நின்று கொண்டிருப்பதாகவும் ,

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி எனவும் அப்படி ஆகும் பட்சத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் இல்லாமல் இலவசமாக குடிநீர் இணைப்பு கொண்டு வர இருப்பதாகவும் , மத்திய அரசின் திட்டங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் இலவசமாக உங்களை வந்தடைய வேண்டும் எனவும் பேசினார். தொடர்ந்து பல்லடத்தில் ஒரே ஒரு மோடி மருந்தகம் மட்டும் இருப்பதாகவும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் 100 நாட்களில் ஐந்து மோடி மருத்தகங்களை கொண்டு வர முடியும் எனவும் பேசினார்.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி என்பதால் என்னால் அந்த உத்தரவாதத்தை தர முடியும் எனவும் பேசினார். பல்லடம் தொகுதி மக்களுக்காக எனது உழைப்பையும் அன்பையும் கொடுக்கிறேன் யாருக்கும் பணம் கொடுக்கப் போவதில்லை என்றுதான் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளேன். மக்களை மலிவு படுத்தி வாக்குகளை பெற்று 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடாது என்பதற்காகவும் எல்லாரையும் மனிதர்களாக தாய் தந்தையராக மதிப்பவனாக இதை கூறுகிறேன். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பாராளுமன்ற அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

அதனால் தன்னை கோவையில் வந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களை தேடி நான் வருகிறேன் உங்களுக்காக பணி புரிய ஒரு சேவகனாக வருகிறேன் என பேசினார்.

Tags

Next Story