அருள்மிகு உண்ணாமுலை தாயார் உடனாகிய அண்ணாமலையார் திருகல்யாணம்
அருள்மிகு உண்ணாமுலை தாயார் உடனாகிய அண்ணாமலையார் திருகல்யாணம்
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு தெலுங்கு தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு உண்ணாமுலை தாயார் உடனாகிய அண்ணாமலையார் திருக்கோயில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் வருடா வருடம் மார்கழி மாதம் திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசன பெருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இதன்படி கடந்த 18ஆம் தேதி திங்கட்கிழமை கொடி ஏற்றுதல், ஆருத்ரா தரிசன முகூர்த்தக்கால் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் விழா சிறப்பாக தொடங்கியது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருகல்யாண வைபோகம் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகளை கொண்டு நடைபெற்ற பின்னர் ஆருத்ரா தரிசன பெருவிழாவும் நடந்தது. இதில் மங்கல இசையுடன் திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, புனித நீர் வழிபாடு, அம்மையப்பர் வழிபாடு, வேள்வி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தெரு பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது ஓமலூர் பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.