பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

வடக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில், எம்எல்ஏ கதிரவன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  

வடக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில், எம்எல்ஏ கதிரவன் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

திருச்சி மாவட்டம் பூனாம்பாளையம் ஊராட்சி வடக்குப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, ஓவிய, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா இன்று காலை 11 மணியளவில நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் திமுக ஒன்றிய நகர மாவட்ட நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story