பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 16வது ஆண்டு விழா நடந்தது.

குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 16வது ஆண்டு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 16வது ஆண்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி செயலர் முருகேசன், பொருளர் கவிதா, முதல்வர் ராஜஸ்ரீ, உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

Anniversary celebration in schoolபள்ளி மாணவ, மாணவியர்களின் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. நவகிரக நாயகிகள் நாடகம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்திய நடனம் மட்டுமில்லாமல் மேற்கத்திய நடனமும் ஆடி அசத்தினர். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story