ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்

ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்

இராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் 16-ம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இதற்கான விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி மாதேஸ்வரி சத்தியமூர்த்தி குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் டி. வித்யாசாகர் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினரை மாணவி விஜிலா அறிமுகம் செய்துவைத்தார். இவ்விழாவில் பேச்சாளர் சிகிசிவம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். இதில் அவர் மேலும் பேசியது: மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்களை கடிந்நு கொள்ளாமல் சரியான முறையில் தவறை மீண்டும் நிகழாத வகையில் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் என ஆசிரியர்க்கு அறிவுரை நல்கினார்.

பெற்றோர்கள் குழந்தைகளை தவறு செய்யும் பொழுது தவறை சுட்டிக்காட்டி சரியாக நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாணவ மாணவியரும் கல்வி கற்பதுடன் நன்கு விளையாடவும் ஊக்கப்படுத்துவது அவசியம் என அறிவுறுத்தினார்.

நன்றாக மைதானத்தில் விளையாடும் பொழுது பருவக் காலங்களில் ஏற்படும் விபரீதங்கள் தடுக்கப்படும் எனவும் அலைபேசி உபயோகம் வெகுவாக தவிர்க்கப்படும். பெற்றோர்களுக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்கள் இருப்பதால், பள்ளி குழந்தைகள் கையாள்வதில் கவனமாக இருந்து வழிநடத்திட வேண்டும் என்றார்.

விழாவில் பள்ளியின் மாணவ மாணவியர் தமிழ் பாரம்பரிய, மேற்கத்திய கண்கவர் பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் பங்குப்பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசளித்து பாராட்டினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினர் சுகிசிவத்திற்கு பள்ளியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி சால்வை போர்த்தி நினைவு பரிசளித்து கெளரவித்தார். இதில் பள்ளியின் ஆசிரியர்-பெற்றோர் தொடர்பு அலுவலர் மு.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பள்ளியின் ஆங்கில ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.

Tags

Next Story