இருளில் மூழ்கிய அன்னூர் நகரம் -பரிதவித்த பொதுமக்கள்!
இருளில் மூழ்கிய அன்னூர்
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 9 மணிக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து வழக்கம் போல மாலை 5 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியை கடந்தும் சுமார் 13 மணி நேரத்துக்கு மேலாக மின் வினியோகம் சீரடையாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்விநியோகம் தடைபட்டதன் காரணமாக அன்னூர் நகரத் தெருக்கள் இருளில் மூழ்கியதால் பெரும்பாலான கடைகள் முன்கூட்டியே அடைக்கப்பட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். மளிகை மற்றும் மருந்தகங்களில் மட்டும் மெழுகுபர்த்தி வெளிச்சத்தில் விற்பனையை தொடர்ந்தனர். எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவு நேரத்திலும் மின் தடை தொடர்ந்ததால் குழந்தைகள் பள்ளி பாடங்களை படிக்க முடியவில்லை எனவும் உணவு சமைக்க முடியவில்லை என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது மின்கம்பங்களில் புதிய ஒயர்கள் மாற்றும் பணி குறித்த நேரத்தில் நிறைவு பெறாத காரணமாக மின்விநியோகம் தடைபட்டதாக விரைவில் தெரிவித்தனர்.
Next Story