வழக்கறிஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
நடந்து முடிந்த 2024-2025 கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் செயலாளராக திரு.N.செந்தில்ராஜன், இணைச் செயலாளராக திரு.V.A.பாலாஜி, நூலகராக திருமதி.P.லெட்சுமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி தேர்வு செய்வதற்காக திரு.B.செல்வம், திரு.K.அருள், திரு.M.K.ராஜசேகர் ஆகியோர் போட்டியிலிருந்து விலகினர். அதன்பிறகு தலைவர் பொறுப்பு போட்டியிலிருந்து திரு.R.ராஜசேகர் மற்றும் திரு.R.சங்கர் ஆகியோர் விலகினர்.
அதனால் தேர்தல் தலைவர்,துணைத் தலைவர்,பொருளாளர்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்பிற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட திரு.V.சங்கர் 135 வாக்குகளும், திரு.S.விவேகனாந்தன் 286 வாக்குகளும் பெற்று 151 வாக்கு வித்தியாசத்தில் தலைவராக திரு.S.விவேகனாந்தன் வெற்றி பெற்றார். துணைத் தலைவர் தேர்தலில் திரு.C.ரவிச்சந்திரன் 155 வாக்குகளும், L.A.இளங்கோவன் அவர்கள் 272 வாக்குகள் பெற்று 117 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொருளாளர் தேர்வில் திரு.நாகரத்தினம் 200 வாக்குகளும், திரு.S.ராஜா 222 வாக்குகள் பெற்று 22 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றார். நிர்வாகக் குழு தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் திரு.S.அய்யப்பன் 314 வாக்குகளும், திரு.K.குமரவேல் 311 வாக்குகளும் திரு.N.செல்வக்குமார் 295 வாக்குகளும் திரு.V.சுரேஷ்குமார் 290 வாக்குகளும், திருமதிA.மங்களம் 272 வாக்குகளும், திருமதி.M.வித்யா 271 வாக்குகளும் திரு.D.ஜெயபால் 230 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் அலுவலர்கள் திரு.K.சக்கரபாணி, திரு.K.S.கண்ணன் திரு.A.கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் திரு.K.ரஞ்சித்குமார், திரு.A.பழனிவேல், திரு.G.சுரேஷ், திரு.C.அன்பரசன், திரு.L.காஸ்பரோவ் ஆனந்த், திரு.R.ஹரிவர்தன், திரு.ஶ்ரீராம் திரு.J.வசீகரன் ஆகியோர் உதவியுடன் மிகச் சிறப்பாக நடந்து அனைவரும் பதவியேற்றுள்ளனர். அனைவருடைய பணி சிறக்க வாழ்த்துகள்.. வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்புக்கும் அவர்தம் குடும்பத்தாருடைய நலனுக்கும் பேருதவியாக நம் சங்கமும் அதன் செயல்பாடுகளும் அமைய வாழ்த்துகள்.. -அட்வகேட் சு.வே.ர.,