கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.இரதா கிருஷ்ணன் அறிவிப்பு

கன்னியாகுமரி  பாஜக வேட்பாளர் பொன்.இரதா கிருஷ்ணன் அறிவிப்பு

பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.இரதா கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் அருகே அளத்தங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் பொன். ராதாகிருஷ்ணன். 1-03- 1952-ம் ஆண்டு பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை நாகர்கோவிலிலும், சென்னையில் சட்டப்படிப்பையும் முடித்தவர். திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். 1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 1996, 1998, 1999, 2004, 2009, 2014 , 2019, 2021 வரை 9 முறை குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர்.

இதில் 1999 -ம் ஆண்டு வெற்றி பெற்று, வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சர் பொறுப்பு வகித்தவர். பின்னர் 2014-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று, நரேந்திர மோடி அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தவர். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 10-ம் முறையாக குமரியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

72 வயதான நிலையில், இம்முறை வேறு புதுமுக வேட்பாளர் கன்னியாகுமரி தொகுதியில் களம் இறக்கப்படுவதாகவும், பொன்னாரை பிற மாநிலம் ஒன்றில் கவர்னராக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. இவற்றை உடைத்தெறியும் வகையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைமை வாய்ப்பளித்து இன்று அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

10வது முறையாக போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன், கட்சி தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் வகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றிக்காக உழைப்பேன். குமரி மாவட்டத்தில் மேலும் பல வளர்ச்சி பணிகளை தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டு வர முயற்சிப்பேன் என்றார்.

Tags

Next Story