பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக கே.என்.அருண் நேரு அறிவிப்பு
முசிறி அருகே தண்டலைபுத்தூரில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக கே.என்.அருண்நேரு அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முசிறி அருகே தண்டலைபுத்தூரில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக கே.என்.அருண்நேரு அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் இன்று அறிவித்தார்.இதில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான. கே என் நேருவின் மகன் அருண் நேருவை வேட்பாளராக திமுக தலைவர் அறிவித்தார்.இதனை கொண்டாடும் விதமாக முசிறி மேற்கு ஒன்றியம் தண்டலைபுத்தூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Next Story