முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் - எஸ்.எம்.மதுரா செந்தில் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் - எஸ்.எம்.மதுரா செந்தில் அறிவிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் - நாமக்கல் மேற்குமாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிவிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்டம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் - நாமக்கல் மேற்குமாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அறிவிப்பு
திராவிட இயக்கத்தின் நான்காவது அத்தியாயம், முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் பாகம் இனமும், இயக்கமும், காலமும், கலைஞரும் தந்த அருட்கொடை, தமிழ்கூறும் நல்லுலகின் தன்னிகரில்லா, ஒப்பாருமிக்காருமில்லா ஒருபெரும் ஆருயிர் தலைவர், தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூக நலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டுள்ள நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான மார்ச் 01 ஆம் தேதியன்று, நாமக்கல் மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஆகிய பகுதிகளில் உள்ள கிளை கழகங்களில் கழக கொடியேற்றி மருத்துவ முகாம், இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், ஏழை எளிய பொது மக்களுக்கும், பார்வையற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொண்டாட வேண்டும். மேலும், நாமக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மார்ச் 01 அன்று திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags

Next Story