காட்டுபட்டியில் தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவிப்பு
தேர்தல் புறகணிப்பு
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது காட்டுப்பட்டி கிராமம். இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டுப்பட்டியில் இருந்து சிங்காரக்கோட்டை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையின் வழியாக அணைக்குளம் புதூர், சீலமுத்து நாயக்கனூர், புதுகலிங்கம்பட்டி, காரைக்கட்டூர், தம்பி நாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த சாலை வழியாகத்தான் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் கூட இந்த வழியாக செல்வதில்லை.இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் இருசக்கர வானகங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.இதனால் இந்த பகுதி பொதுமக்கள் சாலை வசதிகோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.