பெரகம்பியில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு.

பெரகம்பியில்  பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு.

பெரகம்பியில் சாலை வசதி செய்து தராததை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் செய்து, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்


பெரகம்பியில் சாலை வசதி செய்து தராததை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் செய்து, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பியில் சுமார் 2500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பெரகம்பியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரகம்பி, எதுமலை கிராமத்தை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வைத்துள்ள பதாகையில் பெரகம்பி எதுமலை சாலையை பொதுமக்கள் 50 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த சாலையை உரிமை கொண்டாடும் வனத்துறை மற்றும் சாலையை சீரமைப்பு செய்யாத நெடுஞ்சாலை துறையை கண்டிக்கிறோம்.பெரகம்பி எதுமலை சீரமைக்காமல் பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story