யானை ஊர்வலத்துடன் நடந்த ஆளூர் தர்கா ஆண்டு விழா
யானை ஊர்வலத்துடன் நடந்த ஆளூர் தர்கா ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ஆளூர் கோச் முகமது சாஹிப் வலியுல்லா தர்காவின் ஆண்டு விழா நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூர் கோச் முகமது சாஹிப் வலியுல்லா தர்காவின் ஆண்டு விழா அரபு வருடத்தின் பனிரெண்டாவது மாதமான துல்ஹச் மாதத்தின் முதல் பிறை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடந்த விழாவில் தினமும் மாலை நேர தொழுகைக்கு பிறகு சிறப்பு மவ்லூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
12வது நாள் கோச் முஹமது சாஹிப் வலியுல்லா தர்காவின் ஆண்டு பெருவிழா நாளில் பிறை கொடி தாங்கிய யானை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் நடத்தப்பட்டன. தர்கா ஆண்டு விழாவில் கேரளா மற்றும் குமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story