பேராவூரணி அரசுப்பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள் ஹரிணி ஹாசினி, சங்கவி வரவேற்றனர். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், கல்விப் புரவலர்கள் க.அன்பழகன், என்.எஸ்.சேகர், கல்வியாளர் கே.வி.கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மகாலட்சுமி சதீஷ் குமார், ராஜலெட்சுமி ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சித.திருவேங்கடம், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், சமூக ஆர்வலர்கள் பொன்.ராமமூர்த்தி, சிவ.சதீஷ்குமார், டாக்டர் இரா.சுவாதினி, ஆசிரியர்கள் எஸ்.பாலாதேவி, ஏ.செல்வராணி, கே.எஸ்.சுரேந்தர், எம்.பிரதீபா, பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக ஆசிரியர் வி.சந்த்ரோதயம் நன்றி கூறினார்.