நர்சரி உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் சார்பாக ஆண்டு செயற்குழு கூட்டம்!
அரிமளம் நர்சரி உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் சார்பாக ஆண்டு செயற்குழு கூட்டம் ஏகாத்தான் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து, நபார்டு வங்கியின் தமிழ்நாடு, பாண்டிச்சேரி தலைமை பொது மேலாளர் சங்கரநாராயணன், நர்சரி உற்பத்தியாளர்கள் கம்பெனி செயல் அதிகாரி வேலாயுதம், நபார்டு வங்கியின் உதவி மேலாளர் தீபக் குமார் மற்றும் வேளாண் நர்சரி உற்பத்தியாளர் கம்பெனி கோபாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மிக அதிகமான நர்சரி உற்பத்தியாளர்கள் அரிமளம் வட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களுடைய வாழ்வாதாரம் அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள வங்கிகளின் உதவி கடன்கள் மற்றும் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்தான விவரங்களுக்காக கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story