இரட்டைமதகடி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
ஆண்டு விழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி ஊராட்சி இரட்டைமதகடி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி ஊராட்சி இரட்டைமதகடி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது. பள்ளி செயலர் அசோகன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். விழாவில் மருத்துவர் பத்மபிரியா சிவா, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மாநிலக் குழு உறுப்பினர் எட்வின், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, வட்டார கல்வி அலுவலர்கள் மணிக்கண்டன், சிவக்குமார், வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, பள்ளிக்குழு தலைவர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழச்சியில் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நடித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பாட்டு, பட்டிமன்றம் என திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பரதநாட்டியம், ஒயிலாட்டம், குச்சிபுடி ஆட்டம் என தனியார் பள்ளிக்கு இணையாக ஆடி அசத்தினர். பள்ளி ஆண்டு விழாவில் 1 ம் முதல் 5 வகுப்பு வரை படிக்க கூடிய மாணவ, மாணவிகளின் அழகான நடனங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இறுதியாக பள்ளி ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Next Story