பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா

பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா
X

பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்துறை தலைவர் பெரியசாமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் சிராஜ்தீன், பாஸ்கரன் ஆகியோர் கல்லுாரி சாதனை குறித்த ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் கவிஞர் ராகவேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இளைய சமுதாய மாணவர்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் விதம், தொலைபேசி தொல்லைபேசியான விதம் மற்றும் படிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்லுாரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் துணை முதல்வர்கள் சசிகலா, சக்திவேல் மற்றும் கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story