ராசிபுரம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

X
ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
ராசிபுரம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றிய அலவாய்ப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.
இந்த ஆண்டு விழா நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் பாலு, பெற்றோர் ஆசிரியர் கழகம் உறுப்பினர்கள் ரவீந்தர், சசிகுமார், சுப்பிரமணியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி, தலைமை ஆசிரியர் பேபி லதா, இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
