மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் ஆறாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சின்னத்திரை பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி ஆசிரியர்களின் பணிகளை சிறப்பாக எடுத்துரைத்து மேலும் மாணவ மாணவிகள் எவ்வாறு கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டும் என்றும் அதேபோல் அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியது போல ஒவ்வொருவரும் கனவு காணுங்கள் தங்களது லட்சிய பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்றும், மாணவர்களின் படிப்பில் எந்த அளவிற்கு ஆசிரியர்கள் கவனம் செலுத்துகிறார்களோ, அதே போல பெற்றோர்களாகிய நீங்களும் மாணவர்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தர வழிகாட்டியாக நீங்கள் செயல்பட வேண்டும், உங்களது முழு ஒத்துழைப்பு குழந்தைகளுக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் மேலும் சாதிக்க முடியும், நல்ல பள்ளியில் நாம் அவர்களை அனுமதி பெற்று சேர்த்து விட்டோம் என்று நீங்கள் குழந்தைகள் மேல் கவனத்தை காட்டாமல் விட்டு விடக்கூடாது எனவே நீங்களும் ஆசிரியர்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துக் கூறினார்.

முன்னதாக இந்த விழாவில் பள்ளியின் தலைவர் நிர்வாக இயக்குனர் சிதம்பரம் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது திருக்குறளின் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அனைவரும் அதை பின்பற்றி வாழ்வில் உயர வேண்டும் என்று விளக்கம் அளித்து பேசினார். மேலும் மாணவ மாணவிகள் என்றும் ஒழுக்கத்துடன் தங்களது கல்விப் பணியை சிறப்பாக செய்து ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும், உங்களது கல்வி, ஒழுக்கம் என்றும் உங்களுக்கு ஒரு சிறப்பான வழிகாட்டியாக அது செயல்படும் எனவே ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடத்தை நன்கு கவனமாக பார்த்து கற்று நீங்கள் பயன்பெற வேண்டும், ஒவ்வொருவரும் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி மேலும் வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கண் கவரும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் , மலை வாழ் மக்கள் நடனம், மற்றும் குஜராத்தி, மலையாள, போன்ற பல்வேறு நடனங்களை ஆடி அசத்தினர். மேலும் பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனமாடியும், விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் அவர்கள் ஈர்த்தனர்.

இதில் குறிப்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பக்தி பாடல்கள், கானா பாடல்கள், கல்வி சம்பந்தமான பாடல்கள் பாடி பெற்றோர்கள் மனதில் அனைவரும் இடம் பிடித்தனர். மேலும் நாட்டுப்புறப்பாடல்கள் பாடியும் அசத்தினர். அனைவரும் உற்சாகமாக இந்த நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி மகிழ்ந்தனர். மேலும் சிறப்பாக நடனம் மற்றும் பாட்டு பாடி அசத்திய மாணவ மாணவிகளுக்கும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். இந்த பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் க. சிதம்பரம், சிறப்பு விருந்தினர் அண்ணா சிங்காரவேலு, பள்ளியின் கல்வி இயக்குனர் பி. சுப்பிரமணியம், இயக்குனர் ஆர். மணிவண்ணன், பள்ளியின் முதல்வர் எஸ். மோகன் குமார், மற்றும் நிர்வாக இயக்குனர்கள் பள்ளி ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Tags

Next Story