கோனேரிப்பட்டியில் நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா

X
ஆண்டு விழாவில் பரிசு வழங்கல்
இராசிபுரம் கோனேரிப்பட்டியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள கோனேரிப்பட்டியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நகராட்சி துவக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது.
இதில் 60க்கும் மேற்றப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெறும். அதேப்போல் இந்த ஆண்டும் நடைப்பெற்ற விழாவில் 1ம் வகுப்பு மாணவர்கள் முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் வரை கலந்துக் கொண்டு சினிமா பாடலுக்கு நடனம் ஆடினர்.
மேலும் இப்பள்ளி 5 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு சென்றதால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
