ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது, இந்த நிகழ்வில் திப்பனப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி- கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த பள்ளி ஆண்டு விழாவிற்கு ஊர் கவுண்டர்களான முருகன், கோவிந்தசாமி, இராதாகிருஷ்ணன் வட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, மேற்பார்வையாளர் அசோக், பள்ளி தலைமை ஆசிரியர் திருவெங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகள் தங்களது தனி திறன்களை வெளிப்படுத்தினார்கள், தமிழர்களின் பரம்பரிய கிராமிய பாடல்கள் தேசப்பத்திப்பாடல்களுக்கு வண்ணமிகு உடை அணிந்து நடனமாடியதை கண்ட கிராம மக்கள் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்மேலும் இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த பள்ளி ஆசிரியர்களை பள்ளியின் முன்னால் மாணவர்கள் கலந்துக் கொண்டு ஆசிரியர்களைப் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி கிராம கல்வி குழுத் தலைவர். அபிலசா துணைத் தலைவர் குணா மாது, கென்னடி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர், தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்பட்ட இந்த விழாவில் கும்பனூர், தாசிரிப்பள்ளி, கொண்டப்பள்ளி, திப்பன்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமன மக்கள் இந்த விழாவினை கண்டு களித்தனர்.