ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணாமணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிர்மலா தேவி, துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். உதவி ஆசிரியர் உமா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர்கள் லோகேஷா, ராஜேந்திரன், வட்டார மேற்பார்வையாளர் வசந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ், ராஜசேகரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் ஆசிரியர்கள் சக்திவேல், சுபைதாபானு, சகிலா, சரண்யா, பாரதி, பானுமதி, சத்துணவு அமைப்பாளர் பழனி மற்றும் பிடி ஏ நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story