பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் பரிசுப் பொருட்களை வழங்கினார்
பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி மாணவர்கள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் தங்களது தனி திறன்களை நடனமாடியும் கட்டுரை போட்டி ஓட்டப்பந்தய போட்டி என்ன பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனித் திறன்களை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய கவுரவித்தார். இந்த விழாவில் தலைமை ஆசிரியர் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story