நெத்திமேடு சில்வர் லைன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

X
பட்டம் வழங்கல்
நெத்திமேடு சில்வர்லைன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சேலம் நெத்திமேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சில்வர்லைன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 22-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரனும், கோவையைச் சேர்ந்த பேராசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான சாந்தாமணியும் கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.சங்கர் மற்றும் பள்ளி முதல்வர் புகழ்விழி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
