சிங்கபெருமாள் கோவிலில் அரசு பள்ளியில் ஆண்டு விழா

X
சிங்கபெருமாள் கோவிலில் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் ,சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி,பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
உடன் மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள்,பள்ளி தலைமை ஆசிரியர்,வார்டு உறுப்பினர்கள்,பெற்றோர் சங்கத்தினர்கள்,திமுக நிர்வாகிகள்,பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
