எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா

எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா

விருது வழங்கல் 

எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகள், பேராசிரியர்களுக்கு திறமை விருதுகள் வழங்கப்பட்டது.

மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 31வது ஆண்டு விழா நடந்தது. கல்லுாரியின் துணை முதல்வர் மதியழகன் வரவேற்புரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் வாசுதேவராஜ் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக, ஜோகோ நிறுவனத்தின் பன்னாட்டு தலைமை அதிகாரி தினேஷ் கண்ணா ராமலிங்கம் பங்கேற்று, மாணவ -- மாணவியரிடையே உரையாற்றினார்.

விழாவில், காட்சித் தகவலியல் துறை மாணவி கோமதி எழுதிய, தமிழ் உலகம் என்ற நுால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவ - மாணவியர், பேராசிரியர்களுக்கு 'திறமை விருதுகள்' எஸ்.ஆர்.எம்., - ஏ.எஸ்.சி., அறிவியல் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கணிதத்துறை தலைவர் லலித்குமார் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குனர் ராமச்சந்திரன், காட்சித் தகவலியல் துறை துணை தலைவர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story