உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் ஆண்டு விழா

உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில்  ஆண்டு விழா

ஆண்டு விழா 

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை ஸ்ரீவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
எலவனாசூர்கோட்டை ஸ்ரீவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் குமரகுரு, முன்னாள் ஒன்றிய சேர்மன் மயில்மணி குமரகுரு, பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் சிறப்புரையாற்றினர். பள்ளி முதல்வர் விவேகானந்தன் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் வழக்கறிஞர் ராவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story