அதங்கோடு அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா 

அதங்கோடு அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா 
X
விழாவில் பங்கேற்ற கிள்ளியூர் எம் எல் எ ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டம், ஆதங்கோடு பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

குமரி மாவட்டம், அதங்கோடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புலவர் கோவிந்தநாதன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் லதா, மல்லிகா, முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஷீலா வரவேற்றார். விழாவில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அறிக்கை வாசித்தனர்.

மெது கும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார், வட்டார கல்வி அலுவலர் சஜிலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வந்த மாணவ மாணவியருக்கு ராஜேஷ் குமார் பரிசுகள் வழங்கினார்.

Tags

Next Story