அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா
ஆண்டு விழா
வரஞ்சரம் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வரஞ்சரம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் 86ஆம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராமசாமி, தியாகராஜன் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரத்தினவேல் வரவேற்றார். பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சாய் சேவை மையம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக் கட்டடம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டது. தன்னார்வலர்கள் சார்பில் மாணவர்களுக்கு குறிப்பேடு, எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் மாணவர் நரம்பியல் சிறப்பு மருத்துவர் முகுந்தன் பள்ளி கல்வி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி அளிப்பதாக உறுதி அளித்தார். ஆசிரியை ரேவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை அகிலா நன்றி கூறினார்.
Next Story