விழுப்புரம் வி.ஆர்.பி. பள்ளியில் ஆண்டு விழா
பரிசளிப்பு
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியின் 29-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் வி.சோழன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுப்புராயன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் கே.முனுசாமி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் எம்.தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே, மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில் விழுப்புரம் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவ னர் ராஜேஷ், அரசு வக்கீல் நாகராஜன், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் அன்புபெரியசாமி, நகரமன்ற கவுன்சிலர் கோதண்டராமன், ஏழுமலை, கேபிள் சுரேஷ்பாபு, வக்கீல் மனோ உள்பட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர், மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.