ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு

ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு

நாகப்பட்டினம் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு நடந்தது.

நாகப்பட்டினம் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு நடந்தது.

தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினரின் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவல்துறையினரின் மரியாதை அணி வகுப்பு கவாத்தை ஏற்று கொண்டார்கள், பின்பு ஆயுதப்படை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்தும் காவல்துறையினர் பயன்படுத்தி வரும் வாகனங்களை தனிக்கை செய்தும் காவல் நிலையங்களில் ரோந்து பணிக்காக செயல்பட்டு வரும் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்கள் . பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பகம், நிர்வாக அலுவலகம் (நிர்வாகம்), நிர்வாக அலுவலகம் (கணக்கு), நிர்வாக அலுவலகம் (பொது), தண்டனைபிரிவு, விடுப்புபிரிவு, ஊதியப்பிரிவு, பயணச் சலுகை பணப்பிரிவு, புகைப்படப்பிரிவு மட்டும் கட்டிடப்பிரிவு என அனைத்து பிரிவுகளையும் ஆய்வு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க அறிவுரைகள் வழங்கியதுடன் நாகை மாவட்ட காவல்துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியின் போது நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story