தனியார் கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா!

தனியார் கல்லூரியின்  ஆண்டு விளையாட்டு விழா!

விளையாட்டு விழா

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் 28ஆம் ஆண்டு விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் 28ஆம் ஆண்டு விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. விழாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறை தலைமைக் கண்காணிப்பாளர் எஸ். செந்தில்வேலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு என்பது உடலைப் பேணக் கூடியது என்பதுடன், மனிதனுக்கு மகிழ்ச்சி, ஊக்கத்தையும் அளிக்கும் என்பதால் மாணவர்கள் சமூக வலைதளங்களில்கவனத்தைச் செலுத்தாமல் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்தக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஜெஜெ கல்விக் குழுமச் செயலர் நா. சுப்பிரமணியன் வாழ்த்தினார். கல்லூரியின் உடற்கல்வித் துறைத் தலைவர் மு. ஜெகதீஸ் பாபு ஆண்டறிக்கை வாசித்தார். இக்கல்லூரியின் முதல்வர் ஜ. பரசுராமன் வரவேற்றார். உடற்கல்வித் துறை பேராசிரியர் பி. கேத்ரின் ஜாய் செல்வகுமாரி நன்றி கூறினார்.

Tags

Next Story