விடைத்தாள் திருத்தும் மையம்: பொதுக்குழுவில் தீர்மானம்!

விடைத்தாள் திருத்தும் மையம்: பொதுக்குழுவில் தீர்மானம்!

அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களை நிரந்தரமாக உருவாக்கிட வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களை நிரந்தரமாக உருவாக்கிட வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. கௌரவ தலைவர் வெள்ளைச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் முஜிபுர் வரவேற்றார். கூட்டத்தில் மாநில முன்னாள் தலைவர் பெருமாள்சாமி, பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசி தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநில பொருளாளர் கார்த்திகேயன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாநில மகளிர் பிரிவு செயலாளர் சுபாஷினி, அமைப்பு செயலாளர் முத்தையா, மாநில தலைமையிடச் செயலாளர் இராவணன், சட்ட செயலாளர் மகேந்திரன், பிரச்சார செயலாளர் சந்திரபோஸ், செய்தி தொடர்பு செயலாளர் மாயவன்,மாநில அரசு உதவி பெறும் பள்ளிகள் செயலாளர் அஜின்,ஆகியோர் பொதுக்குழு கூட்ட சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களை நிரந்தரமாக உருவாக்கிடவும், சிபிஎஸ் ரத்து, ஊக்க ஊதியம். மருத்துவ காப்பீட்டில் கட்டணமில்லா சிகிச்சை முறை. ஈட்டிய விடுப்பு, 2009 ஊதிய முரண்பாடு,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு (1:8), உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துதல், உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் சூரியபிரம்மன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பாலகணேசன், செல்லையா, முத்துக் குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story