தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்ததில் பலரும் பலியாகி உள்ளனர். இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தெரிவித்தார். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தினர் நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து, கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த இந்த பேரணியானது ராசிபுரம் கடைவீதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ.செந்தில் நாதன் தலைமை வகித்தார். இதில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டு கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி மது ஒழிப்புக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அ. பிரபு , மாவட்ட தலைமை நிர்வாகிகள் M.விக்னேஷ், K.ராஜ்குமார், விஜய் காளியப்பன் , R.கோபி, S.ஹரி , மாவட்ட மாணவரணி தலைவர் திருச்செங்கோடு M.நாகராஜ், நகர தலைவர் இப்ரகிம், நகர இளைஞர்அணி தலைவர் மேகருண்ணிசா, மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் திருச்செங்கோடு வக்கீல் செல்வம், சக்திவேல், திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம் தலைவர் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியம் தலைவர் , உதயகுமார், ராசிபுரம் நகர தலைவர் M,பாக்கியராஜ் ,நகர இளைஞர்அணி தலைவர் M, சுதர்சன் , நகர மாணவரணி தலைவர் சினீவாசன், ராசிபுரம் நகர மகளிர் அணி கனிமொழி, ராசிபுரம் புதிய பேருந்து கார்த்திக், N,கிருஷ்ணமூர்த்தி நம்மகிரிப்பேட்டை ஒன்றிய தலைவர் , நாமகிரிப்பேட்டை ஒன்றிய இளைஞன் தலைவர் R, அருண்குமார், ராசிபுரம் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் K,தாமரைகண்ணன், வெண்ணத்தூர் கிழக்கு ஒன்றியம் தலைவர் M,M,மணிகண்டன், வெண்ணத்தூர் மேற்கு ஒன்றியம் தலைவர் அருள் , குருசாமி பாளையம் பேரூர், K,வேலு சேந்தமங்கலம் நகர தலைவர் A, பாஷா, சேந்தமங்கலம் இளைஞரணி தலைவர் S, சாரதி, சேந்தமங்கலம் ஒன்றியம் தலைவர் K,பிரபு, நாமக்கல் (கி) மாவட்ட இளைஞர் அணி தலைவர் அ,பிரபு உள்ளிட்ட இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story