குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி, கையெழுத்து இயக்கம், மனித சங்கிலி, மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டது, கல்வி உபகரணங்கள் வழங்குதல் ஆகிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, சிறப்பாக செயல்படுத்திய காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பிற்கு விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் சுதா மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story