குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்பு

உறுதிமொழியேற்பு 

சாயல்குடி அருகே ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியேற்றனர்.

ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம். கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவரும் நோக்கத்தில் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி நிறுவனம் தொண்டு செய்து வருகிறது. ராமநதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மூக்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூப்பாண்டியபுரம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூரல் வொருக்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பாக ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் முனிஸ்வரி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கல்வி கற்கும் வயதில் குழந்தைகள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள், கல்வியின் முக்கியத்துவம், மற்றும் குழந்தைகள் கல்விக்கான அரசு நல திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை ஓவியங்கள் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கையெழுத்து பிரச்சாரம் செய்தனர். அத்துடன் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாக்குவோம் என்று உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி பணியாளர் கன்னியம்மாள் நன்றி கூறினார்.

Tags

Next Story