குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 

 உறுதிமொழி 

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, மருதுபாண்டியர் கல்லூரி வளாகத்தில் உறுதிமொழி எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை வாசிக்க தொடர்ந்து துணை முதல்வர் இரா.தங்கராஜ், பேராசிரியர்கள், அலுவலக மேலாளர் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை எற்றுக் கொண்டனர். முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ந.சந்தோகுமார் வரவேற்றார். நிறைவாக செஞ்சுருள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சத்தியபிரபா நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ரா.கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story