கிராமிய கரக ஆட்டத்துடன் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி கிராமிய கரக ஆட்டத்துடன் தொடங்கியது பேரணியை கோட்டாட்சியர் சிவக்குமார் துவங்கி வைத்தார் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளான அண்ணா சிலை பேருந்து நிலையம் காந்தி பூங்கா சாலை காமராஜர் சிலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை பேரணி முடிவடைந்தது பேரணியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர் நலன் கருத்தில் கொண்டு கள்ளச்சாரத்துக்கு எதிரான மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஒட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பற்றி எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் கோட்டாட்சியர் வழங்கினார்.
பேரணியில் வட்டாட்சியர் ஜபருல்லா கலால் அலுவலர் முத்தரசன் மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.